மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் துணைவியாரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியின் தாயாருமான ராசாத்தி அம்மாள் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.
தொடர்ந்து அவர் சண்முகா அர்ச்சனை செய்து தனது மகள் கனிமொழி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சிறப்பு வழிபாடு செய்தார்.
தொடர்ந்து கிரிவல பிரகாரத்தை வலம் வந்த அவர், கோவில் வளாகங்களில் உள்ள தெய்வங்களை வணங்கினார்.