ETV Bharat / state

தீப்பிடிக்கும் மின்சார வாகனங்கள் - கட்டுப்படுத்துவது எப்படி? - மின்சார பைக்கில் தீயை அணைப்பது எப்படி

மின்சாதனங்களில் ஏற்படும் தீயை அணைக்க முற்படும் போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது குறித்து பார்க்கலாம்.

Etv Bharat தீப்பிடிக்கும் மின்சார வாகனங்கள்

author img

By

Published : Sep 28, 2022, 7:07 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் நேற்று (செப்.27) மின்சார இருசக்கர வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இந்த தீயை அணைப்பதற்காக தண்ணீரை ஊற்றிய போது பேட்டரி வெடித்து சிதறியதாக பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். வீடு தோறும் மின்சார வாகனங்கள் வந்து விட்ட நிலையில் திடீரென ஏற்படும் தீவிபத்துக்களின் போது என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இது தொடர்பாக அறிவதற்காக மின்சார வாகனங்களை பழுதுபார்க்கும் மெக்கானிக்கான சிவராமகிருஷ்ணனிம் ஆலோசனை கேட்டோம். இது குறித்து விளக்கிய அவர், மின்சார வாகனங்கள் மட்டுமின்றி எந்த மின்சாதனங்கள் ஆனாலும் தீப்பிடித்து எரியும் போது தண்ணீரை பயன்படுத்தவே கூடாது என எச்சரிக்கிறார்.

தீப்பிடித்துவிட்டால் முதல் வேலையாக வீட்டுக்கு வரும் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். இவ்வாறு செய்யாமல் தண்ணீர் ஊற்றுவதால் ஷார்ட் சர்க்கியூட் ஏற்பட்டு வெடித்துச் சிதறுவது நிச்சயம் என்கிறார் சிவராமகிருஷ்ணன். சிறிய அளவிலான தீயாக இருந்தால், சோடியம் பை கார்பனேட் அதாவது வீட்டின் சமையலறையில் இருக்கும் சோடாவைக் கொண்டு அணைக்க முயற்சிக்கலாம்.

இல்லை என்றால் கனமான போர்வையைக் கொண்டு மூட வேண்டும். இது நெருப்புக்கு தேவையான ஆக்சிஜனை கட்டுப்படுத்தி தீ மேலும் பற்றி எரிவதை தடுக்கும். தீ பெரிய அளவில் எரியும் போது உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். முறையான தீத்தடுப்பு சாதனங்கள் மூலம் தீயை அணைக்க முயல வேண்டும்.

வரும் முன் காப்பதே நலம்: மின்சார வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட மின்னழுத்தம் அதாவது வோல்டேஜில் வாகனங்களை சார்ஜ் செய்ய பரிந்துரைக்கின்றன. இதிலிருந்து குறைந்த வோல்டேஜ் அல்லது, அதிக வோல்டேஜில் சார்ஜ் செய்தால் தீப்பற்றி எரிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மின்சாதனங்களுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே சார்ஜ் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இதனைக்கடந்து அதிக நேரம் சார்ஜ் செய்வதும் தீப்பிடிப்பதற்கு முக்கியமான காரணமாகும். தொழில்நுட்ப வளர்ச்சியால் மின்சார வாகனங்கள் வீடு தோறும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டாலும் கூட தொழில்நுட்ப சிக்கல்கள் , மக்களில் சிலருக்கு மனச்சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. வருங்கால தொழில்நுட்ப மேம்பாடு இவற்றிற்கு நிரந்தர தீர்வைத் தரும் என எதிர்பார்க்கலாம்.

இதையும் படிங்க: கிண்டி தொழிற்பேட்டை அருகே கார் விபத்து - ஓட்டுநர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.