ETV Bharat / state

மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் பகுத்தறிவு கருத்தரங்கம்; இந்து முன்னணியினர் எதிர்ப்பு!

மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் உள்ளே நடைபெற்ற பகுத்தறிவு சொற்பொழிவு நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்க கோரி, இந்து முன்னணியினர் அமைப்பினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் தொடர்பான காணொலி

author img

By

Published : Oct 28, 2021, 9:25 AM IST

திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சமூகவியல் துறை சார்பில் 'பெரியாரும் இஸ்லாமும்' என்ற தலைப்பில் பகுத்தறிவு சொற்பொழி நேற்று (அக்.27) நடைபெற்றது. இதில் 'புதிய விடியல்' இதழின் ஆசிரியர் ரியாஸ் அகமது கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார்.

முன்னதாக பல்கலைக்கழகத்தில் திராவிடர் கொள்கை புகுத்தப்படுவதாக புகார் எழுந்த்து. இதனால் நிகழ்ச்சியை நடத்த இந்து முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பல்கலைக்கழகத்தின் முன்னர் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் தொடர்பான காணொலி

இந்நிலையில் இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையிலானோர், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கோரி காவல்துறையினருடன் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் புகாரளிக்கப் போவதாக கூறியபடியே இந்து முன்னணியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: மங்கள வாத்தியங்கள் முழங்க தடபுடலாக நடந்த திருநங்கை ரியா திருமணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.