நெல்லை மாவட்டத்தில் தினமும் 300க்கும் மேற்பட்டோர் கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் 491 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத வகையில் தொற்று பாதிப்பு 500-ஐ நெருங்கியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், நெல்லை அருகே கரோனாவால் அரசு மருத்துவமனை மூடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டம் கல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 6 பேர் கரோனா உறுதிசெய்யப்பட்டது.
![Government Hospital Closed for doctors and Nurses affected corona in nellai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvl-01a-nellaigovthospitalclosed-reasoncorona-photos-7205101_22042021140037_2204f_1619080237_203.jpg)
இதையடுத்து கல்லூர் அரசு மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. அங்கு சுகாதார ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தினர்.