ETV Bharat / state

வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து - Tirunelveli district news

திருநெல்வேலி: பொட்டல் அருகே பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.

பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து
பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து
author img

By

Published : Oct 29, 2020, 12:43 PM IST

திருநெல்வேலி மாவட்டம் பொட்டல் அருகேயுள்ள திருவன்னாதபுரத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன் (35). இவரது வீட்டில் இருந்த பிரிட்ஜ் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

பதட்டமடைந்த அலெக்ஸ்பாண்டியன் தீயை அணைக்க முயன்றபோது மளமளவென தீப்பற்றி எரிந்தது. உடனே அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.

அதன் பேரில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று முற்றிலுமாக தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

சம்பவம் நடந்த சில நொடிக்கு முன்புவரை அலெக்ஸ்பாண்டியன், அவரது குடும்பத்தினர் பிரிட்ஜ் வெடித்த அறையில் இருந்துள்ளனர். அதிர்ஷடவசமாக அவர்கள் வெளியே சென்ற பிறகு பிரிட்ஜ் வெடித்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

இதையும் படிங்க: ஏசி, பிரிட்ஜ் வெடிப்புகளை தவிப்பதற்கான வழிமுறைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.