ETV Bharat / state

மதுபோதையில் நண்பர் அடித்து கொலை: காவல் நிலையத்தில் நான்கு பேர் சரண்! - மது போதையில் இளைஞர் அடித்துக் கொலை

திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே மதுபோதையில் நண்பர் ஒருவரை அடித்து கொலை செய்த நான்கு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

உயிரிழந்த இளைஞர்
உயிரிழந்த இளைஞர்
author img

By

Published : Oct 1, 2020, 3:25 PM IST

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே மதுபோதையில் நண்பர் ஒருவரை கல்லால் அடித்து படுகொலை செய்த நான்கு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அடுத்த நடுவக்குறிச்சி தெற்கு குளம் அருகில் காட்டுப்பகுதியில் ஆண் சடலம் ஒன்று அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் நெல்லை தாலுதா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்று காவல் துறையினர், அங்கு ஆய்வு செய்ததில், இளைஞர் ஒருவர் கம்பு, கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

கொலை நடந்த இடத்தில் நான்கு மது பாட்டில்கள் கிடந்ததுள்ளன. மேலும், கல்லைக் கொண்டு அடுப்பு தயார் செய்து சமையல் செய்ததும் தெரியவந்தது. எனவே நண்பர்கள் சேர்ந்து, அளவுக்கு அதிகமாக மது அருந்தி போதையில் இளைஞரை கொலை செய்திருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகித்தனர். தொடர்ந்து, தாலுகா காவல் துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

பின்னர், நெல்லை மாவட்ட தடயவியல் நிபுணர்கள் நேரில் வந்து மது பாட்டில்கள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கல், கட்டையை எடுத்துச் சென்றனர். மேலும் சம்பவ இடத்தில் புதிய இருசக்கர வாகனம் ( பஜாஜ் பிளாட்டினா) ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதையடுத்து அந்த இளைஞரின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேவுள்ள நல்லூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் விநாயகம் என்பவரது மகன் சதீஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்ததாகவும், கரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்ததாகவும் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

எனவே அவரது நண்பர்கள் சிலர் சதீஷ்குமாரை நடுவக்குறிச்சி அழைத்துவந்து மது வாங்கி கொடுத்து போதையில் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இதற்கிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுடலை முத்து, சுடலை, முத்துக்குமார், சின்னத்துரை ஆகிய நான்கு நபர்கள் நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தனர்.

காவல் நிலையத்தில் சரணடைந்த நான்கு பேர்
காவல் நிலையத்தில் சரணடைந்த நான்கு பேர்

இதையடுத்து அவர்களை தாலுகா காவல் துறையினர் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில், சரணடைந்த நான்கு நபர்களும் மும்பையில் சதீஷ்குமாருடன் பணி புரிந்துள்ளனர். அந்த பழக்கத்தில் சதீஷ்குமாரை நேற்று முன்தினம் (செப்.29) இரவு நடுவக்குறிச்சிக்கு அழைத்துள்ளனர். சதீஷ்குமார் தனது தந்தையின் புது பைக்கில் நடுவக்குறிச்சி சென்றுள்ளார்.

பின்னர், ஐந்து பேரும் சேர்ந்து காட்டுப் பகுதியில் மது அருந்தி அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் போதை அதிகமானதால் சதீஷ்குமாருக்கும் சரணடைந்த நான்கு நபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதத்தில் சதீஷ்குமாரை, நான்குபேரும் சேர்ந்து கல்லால் அடித்தும் கம்பால் அடித்தும் கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக நான்கு பேரும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் சதீஷ்குமார் கொலையில் வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா, பெண் பிரச்னை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தொடர்ந்து நான்கு நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோழி திருடியதாக கூறி அண்ணனை கொலை செய்த தம்பி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.