ETV Bharat / state

நெல்லையில் அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டி கொலை!

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் முன்னாள் அதிமுக பஞ்சாயத்து துணைத் தலைவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லையில் அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டி கொலை

author img

By

Published : Jul 25, 2023, 8:15 AM IST

நெல்லையில் அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டி கொலை

திருநெல்வேலி: பேட்டையில் முன்னாள் அதிமுக பஞ்சயத்து துணைத் தலைவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பேட்டை போலீஸார் கொலை செய்தவர்களைத் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் பேட்டையை அடுத்த மயிலப்பபுரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர், பிச்சை ராஜு (52). இவர் முன்னாள் பேட்டை ரூரல் பஞ்சாயத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து உள்ளார்.

மேலும், இவர் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் நெல்லை மாநகராட்சி 18வது வார்டு வேட்பாளராகவும் போட்டியிட்டார். இவர் பேட்டை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய டாஸ்மாக் மதுபானக் கடையில் பார் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு வழக்கமான பணிகளை முடித்து விட்டு பிச்சைராஜ் பேட்டை எம்.ஜி.ஆர் நகர் பாரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் பேட்டை ரயில் நிலையம் வீரபாகு நகர் வழியாக சென்று உள்ளார்.

அப்போது வீரபாகு நகர் ரயில்வே சுரங்கத்தில் நின்றிருந்த மர்ம நபர்கள் பிச்சை ராஜை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பிச்சைராஜ் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார். இதனை அந்த வழியாக வந்த பொதுமக்கள் பார்த்து பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பேட்டை காவல் நிலைய போலீசார், பிச்சை ராஜை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பிச்சை ராஜ் உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் அனிதா தலைமையிலான போலீசார் குழு இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். நெல்லை மாநகரப் பகுதியில் அதிமுக பிரமுகர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பேட்டை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியும் நடந்து வருகிறது.

மேலும், நெல்லை மாநகர் பகுதி முழுவதும் வாகன தணிக்கை செய்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் நபர்கள் குறித்து விசாரணை நடத்த மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் நெல்லை பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் படிங்க: 80 வயது மூதாட்டியை துன்புறுத்தும் பேரன்! மனு கொடுக்க வந்த இடத்தில் உதவிய அரசு ஊழியர்.. நெகிழ்ச்சி சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.