ETV Bharat / state

முதல் முறை: காற்றாலைகளில் 5,535 மெகாவாட் கொள்முதல் - தூத்துக்குடி கன்னியாகுமரி

காற்றாலைகள் மூலம் முதன் முறையாக 5,535 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

காற்றாலைகள் மூலம் முதன் முறையாக 5,535 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்

author img

By

Published : Jul 3, 2022, 10:53 AM IST

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் சுமார் 8,618 மெகாவாட் திறனில், காற்றாலை மின் நிலையங்களை அமைத்துள்ளன. ஆண்டுதோறும் மே முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் வரை தென் மாவட்டங்களில் காற்று அதிகளவில் வீசக்கூடும் என்பதால் காற்றாலைகளில் அதிக மின்சாரம் கிடைக்கும்.

2020ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி காற்றாலைகளில் இருந்து, அதிகபட்சமாக 5,129 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. இதுவே ஒரு நாளில் காற்றாலைகளில் இருந்து மின்வாரியம் உற்பத்தி செய்த அதிக கொள்முதல்.

இந்த நிலையில், காற்றாலைகளிலிருந்து எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஜூன் 26ஆம் தேதி முதல்முறையாக 5,239 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. ஆனால் அதைவிட அதிகமாக ஜூன் 30, 5,535 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு நன்றி - பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.