ETV Bharat / state

இளையராஜா பாடல் பாடி அசத்திய தீயணைப்பு அலுவலர் - இளையராஜா பாடல் பாடிய தீயணைப்புத் துறை அதிகாரி

திருநெல்வேலியில் தீயணைப்புத் துறை அலுவலர் ஒருவர், ‘சொர்க்கமே என்றாலும் அது திருநெல்வேலிய போல வருமா’ என்று பாடல் பாடி அசத்தியுள்ளார்.

பாடல் பாடி அசத்திய தீயணைப்பு அலுவலர்
பாடல் பாடி அசத்திய தீயணைப்பு அலுவலர்
author img

By

Published : Apr 23, 2022, 8:25 PM IST

திருநெல்வேலியில் பாய்ந்தோடும் தாமிரபரணி ஆற்றினை பாதுகாக்கும் வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் ‘தூய பொருணை நெல்லைக்கு பெருமை’ என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் ஆற்றினை சுற்றி தூய்மை பணிகள் நடந்துவருகின்றன. அந்த வகையில், இன்று (ஏப்.23) பாபநாசம் மேற்குத்தொடர்ச்சிமலை கானிகுடியிருப்பு முதல் மருதூர் அணைகட்டு வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மாநகர் பகுதிகளில் நெல்லை மாநகராட்சி ஆணையர், தீயணைப்புத் துறை அலுவலர்கள் படகு மூலம் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தூய்மைப் பணியை செய்வோருக்கு ஊக்கமளிக்கும் வகையில் தீயணைப்புத் துறை அலுவலர் வீரராஜ், தாமிரபரணி நதியை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை உள்ளடக்கிய பாடல் ஒன்றை பாடினார்.

பாடல் பாடி அசத்திய தீயணைப்பு அலுவலர்

அந்த வகையில் இளையராஜா இசையில் வெளியான ‘ஊரு விட்டு ஊரு வந்து’ என்ற படத்தின் ‘சொர்க்கமே என்றாலும்’ என்ற பாடலை தனது ஊரை பெருமைப்படுத்தும் வகையில் வரிகள் அமை அமைத்து பாடி அசத்தினார். இந்த பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதையும் படிங்க: ரஷ்யா-உக்ரைன் போர்: சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவரும் தென்காசி மாணவனின் பாடல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.