ETV Bharat / state

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல்! - nellai latest news

திருநெல்வேலி : மகனை கொன்ற குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

family protest in front of nellai collector office

author img

By

Published : Apr 12, 2021, 4:07 PM IST

திருநெல்வேலி மாவட்டம் டவுன் பாப்பா தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு அருண், அஜித் ஆகிய இரண்டு மகன்கள் உள்ள நிலையில் தனது இளைய மகன் அஜித்தை தங்கள் பகுதியை சேர்ந்த சிலர் அடித்து கொன்றுவிட்டதாகவும் எனவே குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் இன்று குடும்பத்தினருடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருமாள் மனு அளிக்க வந்தார்.

அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முடியாது என்று காவலர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெருமாள், அவரது மூத்த மகன் அருண், குடும்பத்தினர், குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி வழங்கும்படி பெருமாள், அவரது குடும்பத்தினர் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலையில் நடுவே அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். பின்னர் காவலர்கள் அனுமதியோடு பெருமாள் மற்றும் உயிரிழந்த அஜித்தின் மனைவி ரெஜிதா ஆகியோர் மட்டும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை சந்தித்து மனு அளித்தனர்.

ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல்

அம்மனுவில், எனது குடும்பத்துக்கும் எங்கள் ஊரை சேர்ந்த திருப்பதி முருகன்,பெருமாள் ஆகியோர் இடையே முன்விரோதம் இருந்த நிலையில் இருவரும் அடியாட்களை வைத்து எனது இளைய மகன் அஜித்தை மானூர் பகுதிக்கு காரில் அழைத்து சென்று அடித்து கொன்றுவிட்டனர். எனவே எனது மகனை கொன்ற குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் பெருமாள் கூறியிருந்தார். இதையடுத்து மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:

அண்ணா பல்கலை. வழிகாட்டுதல் குழு நியமனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.