திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண் ஆகிய மூன்று பேர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில், மூன்று தனிப்படை அமைத்து இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில், இன்று அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை தனிப்படையினர் ஆய்வு செய்தபோது, இந்த கொலை சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அந்தப் பகுதி வழியாக இரண்டு இளைஞர்கள் சந்தேகப்படும் வகையில் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த இளைஞர்கள் யார், எதற்காக இங்கு வந்தனர் என்பது குறித்த விசாரணையை தனிப்படையினர் மேற்கொண்டுவருகின்றனர்.