நெல்லை : தமிழ்நாட்டில் தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், நெல்லை மாநகர போக்குவரத்து காவல்துறையினருக்கு கோடை வெயிலின் தாக்கத்தைப்போக்கும் வகையில் நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் துரைக்குமார் சாலைகளில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானம் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
மேலும் வெப்பத்தை தாங்கக் கூடிய சோலார் தொப்பிகளையும் வழங்கினார். கோடை வெப்பத்தை தணிக்க குளிர்பானம் வழங்கி போக்குவரத்து காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். அப்போது போக்குவரத்துத்துறை காவலர்களிடம் 'எங்களைப்போன்ற அலுவலர்கள் அறையிலிருந்து பணிபுரிந்து வருகிறோம். நீங்கள் தான் சாலைகளில் மக்களோடு மக்களாக பணியாற்றி வருகின்றீர்கள்.
பொதுமக்களிடம் காவல் துறையின் முகமாக நீங்கள் தான் செயல்பட்டு வருகிறீர்கள். அதனால் பொதுமக்களோடு நீங்கள் நல்ல உறவை மேற்கொள்ள வேண்டும்’ என அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்வில் நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் T.P.சுரேஷ்குமார் உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : அப்பாவால் உயிருக்கு ஆபத்து - காதல் திருமணம் செய்த அமைச்சரின் மகள்!