ETV Bharat / state

தேசிய கொடிக்கு மரியாதை செய்த காந்திமதி யானை - நெல்லை நெல்லையப்பபர் கோவில்

நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லை நெல்லையப்பபர் கோவில் முன் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அப்போது காந்திமதி யானை பிளிறி மரியாதை செய்தது.

Etv Bhaதேசிய கொடிக்கு மரியாதை செய்த காந்திமதி யானைrat
Eதேசிய கொடிக்கு மரியாதை செய்த காந்திமதி யானைtv Bharat
author img

By

Published : Aug 15, 2022, 10:12 AM IST

Updated : Aug 15, 2022, 10:47 AM IST

திருநெல்வேலி : நாட்டின் 76-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் இநது அறநிலையத்துறைக்குட்பட்ட ஒரு சில கோவில்களில் மட்டும் கோவிலில் உள்ள பூஜை முறைப்படி தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். அதன்படி தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோவிலில் 76-வது சுதந்திர தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

நெல்லையப்பர் கோவில் முன் அமைந்துள்ள விக்டோரியா மகாராணி வழங்கிய விளக்குத்தூண் அருகே தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் செயல் அலுவலர் ஐயர் சிவமணி தேசிய கொடியை ஏற்றினார்.

தேசிய கொடிக்கு மரியாதை செய்த காந்திமதி யானை

அதனை தொடர்ந்து கோவில் யானை காந்திமதி பிளிறி மரியாதை செய்தது.தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் தேசியக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை செய்தனர். பின்னர் விபூதி பிரசாதம், இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க :திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆசிரமத்தில் தேசியக்கொடி ஏற்றினார் இளையராஜா

Last Updated : Aug 15, 2022, 10:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.