நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள பொட்டல் கிராமத்தில் உணவுக்காக வனவிலங்குகள் அடிக்கடி கீழே இறங்குவது வழக்கம். அதேபோல, இன்று (டிச.26) காலையில் காட்டுப்பகுதியில் ஒரு ஆண் யானை உணவுக்காக கீழே வந்தது.
அப்போது, அங்கிருந்த பனைமரத்தில் உள்ள பனை பழங்களின் வாசத்தை முகர்ந்த அந்த யானை அவற்றைப் பறிப்பதற்காக மரத்தை வேரோடு சாய்க்க முயற்சித்துள்ளது. அப்போது, எதிர்பாராத விதமாக அந்த பனை மரம் அருகே உள்ள மின்சார கம்பி மீது சாய்ந்தது. நடந்தவை குறித்து சற்றும் அறியாத அந்த யானை, அதை தொடவே அதன் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின், அங்கு ஆண் யானைக்கு உடற்கூராய்வு செய்ததோடு, வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் குடிநீர் தொட்டியில் மலம்.. புதுக்கோட்டையில் பகீர் சம்பவம்