ETV Bharat / state

பாஜகவை தாங்கி பிடிக்கிறதா அதிமுக? - ஈபிஎஸ் பேச்சால் சர்ச்சை! - nellai district news

பல கட்சிகளை அதிமுகவினர் தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

பல கட்சிகளை அதிமுக தாங்கி பிடிக்கிறது - ஈபிஎஸ் சூசகம்!

author img

By

Published : Feb 10, 2023, 1:20 PM IST

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

திருநெல்வேலி: நெல்லை கேடிசி நகரில் நடைபெற்ற அதிமுக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியனின் இல்ல விழாவில், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. மக்கள் கொந்தளிப்போடு இருக்கிறார்கள்.

21 மாத கால ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மக்களுக்கு எதையும் செய்யவில்லை. இந்த ஆட்சியில் கருணாநிதிக்கு நினைவிடமும், நூலகமும் மட்டுமே கட்டி இருக்கிறார்கள். எழுதாத பேனாவை எங்கு வைத்தாலும் ஒன்றுதான். கடலுக்குள் வைப்பதால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

திமுக தேர்தல் அறிக்கையாக கொடுத்த புத்தகத்தை, தலையணை போன்று வைக்கும் அளவிற்கு அறிவிப்புகளை கொடுத்தார்கள். ஆனால் எதையும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் பாலியல் குற்றம் அதிகரித்துள்ளது. போதை பொருள் விற்பனை அதிகரித்து, தாராளமாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டாலின் பொம்மை முதலமைச்சராக இருக்கிறார். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கட்சிகள், அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டார்கள். ஈரோடு நகராட்சி பகுதிகளில் சோதனை ஓட்டம் நடத்தி முடித்த பிறகும் கூட, முழுமையான குடிநீர் கொடுக்காத அரசு, திமுக அரசு. மக்களுக்கு இலவச வேட்டி - சேலை வழங்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

டெல்டா மாவட்டம் புயலால் பாதிக்கப்பட்டபோது, ஹெக்டேருக்கு 30,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால், தற்போது அவர்களுக்கு குறைந்தபட்ச இழப்பீடு தொகை கூட கொடுக்கவில்லை. இழப்பீடு தொகை உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.

டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்ட விவகாரத்தில், எதிர்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு பேசுகிறார். பல கட்சிகளுக்கு அதிமுக உதவிகரமாக இருந்து கொண்டிருக்கிறது. அவர்களை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். இடைத்தேர்தலில் பாஜக எங்களோடு கூட்டணியில் இருக்கிறது.

நேற்று (பிப்.9) தேர்தல் பிரச்சாரத்தை எங்களோடு இணைந்து தொடங்கி விட்டார்கள். இடைத்தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். ஒரு கோடியில் நினைவு மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைத்துவிட்டு, மீதம் இருக்கும் தொகையில் மாணவர்களுக்கு பேனா வாங்கி கொடுக்கலாம். ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்” என்றார்.

இதையும் படிங்க: ஆளுநருக்கும் அண்ணாமலைக்கும் என்ன தொடர்பு? - கி.வீரமணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.