இது குறித்து தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம் வெளியிட்ட அறிக்கையில், 'திருப்பத்தூர் - மொரப்பூர் ரயில் நிலையங்கள் இடையே பொறியியல் பணிகள் நடைபெறுவதால் பிலாஸ்பூர் - திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் 1 மணி நேரம் தாமதமாக திருப்பத்தூருக்கு வரும். 17, 24ஆம் தேதிகளில் ரயில் சேவை நிறுத்திவைக்கப்படும்.
இதனைப் போன்று கரூர் பிரிவில் திருச்சி போர்ட் பகுதியில் பொறியியல் சார்ந்த பணிகள் நடைபெறயிருப்பதால், நாகர்கோவில் - கச்சிகுடா வாராந்திர ரயில் 1 மணி நேரம் 5 நிமிடங்கள் தாமதமாத வரும். திருச்சி கரூர் பிரிவில் வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளில் மொத்தமாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.