ETV Bharat / state

நிலத்தில் கரடிகள் இறங்கியதால் விவசாயிகள் அவதி!

நெல்லை: சிங்கிகுளம் மலைப்பகுதியில் விவசாய நிலங்களில் அட்டகாசம் செய்யும் கரடிகளை வனத் துறையினர் கூண்டு வைத்துப்பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

author img

By

Published : Jul 24, 2019, 8:28 AM IST

bears mischief in farming land

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதி அருகே அமைந்துள்ளது சிங்கிகுளம் கிராமம். இப்பகுதி முழுவதும் விவசாய பூமி என்பதால் நெல், வாழை, உளுந்து, பூசணி உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு-வருகின்றது. இந்தப் பகுதியில் ஒரு பொத்தை மலையும் உள்ளது. பொத்தை சுனையில் எப்போதும் தண்ணீர் இருக்கும். இங்கு நான்கு கரடிகள் வசித்துவருகின்றன. மலை அடிவாரத்தில்தான் விவசாயமும் நடைபெற்றுவருகின்றது.

இங்கு பயிரிடப்படும் காய்கறிகளை தின்பதற்காகவும் அங்குள்ள குளத்தில் உள்ள மீன்களை உண்பதற்காகவும் கரடிகள் மாலை 6 மணிக்கு மேல் மலையிலிருந்து கீழே இறங்கிவருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக மலை அடிவாரத்தில் ஆடு மேய்க்கும் பெண்கள், ஆண்கள் துணையோடுதான் வந்துசெல்கின்றனர்.

விவசாய நிலத்தில் கரடிகள் இறங்கியதால் விவசாயிகள் அவதி!

இது குறித்து அவர்கள் வனத் துறையினரிடம் புகார் அளித்தைத் தொடர்ந்து, கரடிகளை பிடிப்பதற்காக கூண்டு அமைத்து வனத் துறையினர் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர். கரடிகள் கூண்டில் சிக்காமல் தப்பித்துவருகின்றன.

இது விவசாயிகளுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கரடியை பிடித்து வனத்தில் விட்டால்தான் தாங்கள் நிம்மதியாக விவசாயம் செய்ய முடியும் என்றும், பயமில்லாமல் வாழ முடியும் என்றும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Intro:நெல்லை சிங்கிகுளம் பகுதியில் கரடி இறங்கியதால் அவதிப்படும் விவசாயிகள்

Body:நெல்லை சிங்கிகுளம் பகுதியில் கரடி இறங்கியதால் அவதிப்படும் விவசாயிகள்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.