ETV Bharat / state

வற்றாத நதியின் மடியில் வாழ்ந்தும் நீர் இல்லை: நெல்லை சாலையில் பெண்கள் மறியல் - வற்றாத நதியின் மடியில் வாழ்ந்தும் குடிக்க தண்ணீர் இல்லை

திருநெல்வேலியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிநீர் சீராக வராததால், பெண்கள் காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் சாலை மறியல்
பெண்கள் சாலை மறியல்
author img

By

Published : Feb 25, 2022, 4:20 PM IST

திருநெல்வேலி: கொக்கிரகுளம் பகுதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது. மேலும் தாமிரபரணி கரையோரம் அமைந்துள்ள இந்தப் பகுதியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிநீர் சீராக வராததால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.

குடிநீர்ப் பிரச்சினை

இதனைச் சரிசெய்யக் கோரி மாநகராட்சி அலுவலர்களிடம் பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மேலப்பாளையம் செல்லும் சாலையில் இன்று (பிப்ரவரி 25) 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் சாலை மறியல்

பெண்கள் சாலை மறியல்

இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்துவந்த காவல் துறையினர், அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் சீராக குடிநீர் வழங்கப்படும் எனவும், சீரமைக்கப்படாமல் இருக்கும் பைப் லைன்கள் சரிசெய்யப்படும் என்றும் அலுவலர்கள் கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க: பொதுத்தேர்வு தேதிகள் இன்று மாலை அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.