ETV Bharat / state

மத்திய அரசின் முடிவால் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு சரிந்துவிடும் - இந்திய மருத்தவ சங்கத்தினர் எச்சரிக்கை!

author img

By

Published : Feb 1, 2021, 4:20 PM IST

ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு சரிந்துவிடும் என நெல்லையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

doctors protest against central govt. decision

திருநெல்வேலி: ஆயுர்வேதம் மற்றும் சித்தா மருத்துவர்களும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள அறிவிப்பு ஆணையைத் திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நெல்லை மாவட்டத்தில் இன்று (பிப்.1) தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டு மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மத்திய அரசின் அறிவிப்புப்படி ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு சரிந்துவிடும் என போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து இந்திய மருத்துவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் அன்புராஜன் கூறுகையில், "மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம். அதாவது மத்திய அரசு ஆயுர்வேத மருத்துவ துறையை சேர்ந்த மருத்துவர்களும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்ற அபாயகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது மருத்துவத் துறையில் கலப்படம் ஏற்படுத்தும் செயலாகும்.

உரிய பயிற்சியும் அனுபவமும் இல்லாமல் ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும்போது உயிரிழப்புகளும் மருத்துவ சிக்கல்களும் ஏற்படும். தற்போது உலக அளவில் மருத்துவத் துறையில் இந்தியா சிறந்து விளங்குகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக பலர் இந்தியா வருகின்றனர்.

இந்தியாவிலிருந்து சென்ற மருத்துவர்கள் பலர் உலக அளவில் புகழ் பெற்றவர்களாக இருக்கின்றனர். இந்த புதிய அறிவிப்பின் மூலம் ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் உலகளவில் மருத்துவத் துறையில் இந்தியாவின் மதிப்பு சரிந்துவிடும். எனவே உடனடியாக மத்திய அரசு இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரையில் கட்டிடம் இடிந்து விபத்து - மூவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.