திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள 940 படுக்கைகளுக்கு தினசரி சராசரியாக 7 முதல் 9 ஆயிரம் லிட்டர் வரை ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. 12 கோவிட் மையங்கள், தனியார் மருத்துவமனைகளுக்கும் 2,000 லிட்டர் வரை ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதால், அவசர கால அறுவை சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மகேந்திரகிரி இஸ்ரோ நிறுவனம் பல கட்டங்களாக ஆக்ஸிஜன் வழங்கி வருகிறது.
சமீபத்தில் கூட 3,000 லிட்டர் ஆக்சிஜனை இஸ்ரோ வாங்கியது. இந்நிலையில் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆக்சிஜன் உற்பத்திக் கூடத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிப்பது, முன்னுரிமை அடிப்படையில் ஆக்ஸிஜன் வழங்குவது ஆகியவை தொடர்பாக அலுவலர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: சபாநாயகர் அப்பாவுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!