ETV Bharat / state

’சிறைக்குள் செல்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தொடர் கண்காணிப்பு’ - DIG palani says about prisoners life

திருநெல்வேலி: சிறைக்குள் செல்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாக சிறைத் துறை டிஐஜி பழனி தெரிவித்துள்ளார்.

கரோனோ தடுப்பு விழிப்புணர்வு வாகன பேரணி
கரோனோ தடுப்பு விழிப்புணர்வு வாகன பேரணி
author img

By

Published : Nov 25, 2020, 3:05 PM IST

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறைச் சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கரோனா தடுப்பு விழிப்புணர்வு வாகன பேரணியைத் தமிழ்நாடு சிறைத் துறை டிஐஜி பழனி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

அதன்பின்னர் சிறை வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள மூலிகைத் தோட்டம், தேனீ வளர்ப்புப் பண்ணையைப் பயன்பாட்டிற்குத் தொடங்கிவைத்தார். அந்தத் தோட்டத்தில் நிலவேம்பு உள்ளிட்ட மூலிகைச் செடிகளை நட்டுவைத்தார். சிறைக் கைதிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சியையும் அவர் தொடங்கிவைத்தார்.

மரம் நடும் டிஐஜி
மரம் நடும் டிஐஜி

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழ்நாடு அரசு உத்தரவின்படி சிறைத் துறை சார்பில் நான்காம் கட்ட கரோனா விழிப்புணர்வு இன்று நடத்தப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை சிறையில் மூலிகைத் தோட்டங்கள், தேனி வளர்ப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.

இங்குள்ள கைதிகள் மூலிகைத் தோட்டங்களையும், தேனீ வளர்ப்பையும் பராமரிக்கலாம். இதன்மூலம் சிறைவாசிகளுக்கு மன அழுத்தம் நீங்குவதுடன் விடுதலைக்குப் பிறகு அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான தன்னம்பிக்கை ஏற்படும்.

இன்று நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் 65 பேர் கலந்துகொண்டனர். இந்த விழிப்புணர்வுப் பேரணி மூலம் பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவது உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதே விழிப்புணர்வைச் சிறையில் உள்ள கைதிகளுக்கும் ஏற்படுத்திவருகிறோம். மாநிலம் முழுவதும் எத்தனை கைதிகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற விவரம் தற்போது இல்லை.

பெரும்பாலும் பிணையில் வெளியே சென்றுவரும் கைதிகளுக்குத்தான் கரோனா பாதிப்பு இருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக எந்த ஒரு நபருக்கும் சிறைக்குள் பாதிப்பு இல்லை” என்றார்.

கன்னியாகுமரியைச் சேர்ந்த காசி என்ற இளைஞரை சமீபத்தில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது உடல் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த டிஐஜி பழனி, ”சிறை சட்டத் திட்டங்களுக்குள்பட்டுதான் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.

டிஐஜி பழனி பேசிய காணொலி

சிறைக்குள் வெளியிலிருந்து உணவுகள் கைதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுவது குறித்து கேள்வி எழுப்பியபோது, ”அதுபோன்ற எந்த ஒரு புகாரும் எங்களுக்கு வரவில்லை. சிறைக்குள் செல்போன் புழக்கத்தைக் கட்டுப்படுத்த குழு அமைத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறோம்” என்றார்.

இதையும் படிங்க:தமிழகம் வருகிறது ராணுவம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.