கரோனா வைரஸ் காரணமாக அமலில் இருக்கும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தது.
இதற்கிடையில் திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது கையில் தங்கள் கோரிக்கைகளை அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மௌனம் காத்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதில், கரோனோ பாதுகாப்பு நிதி 5000 ரூபாயை மாதந்தோறும் வழங்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் தினமும் 4 மணி நேர பணி என்ற கணக்கில் பணி வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சி மாநகராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
சமூக பாதுகாப்பு திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக மத்திய அரசு சட்டம் 2016ன் படி 25 சதவீதம் நிதி உதவி வழங்க வேண்டும். அரசாணை 311ன் படி அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தலா ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் ஆகிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.