ETV Bharat / state

ஆடியோ வெளியிட்ட பாளையங்கோட்டை எஸ்.ஐ: தனியாக அழைத்து விசாரித்த டிஜிபி - உதவி ஆய்வாளரை விசாரித்த டிஜிபி

திருநெல்வேலி: மன அழுத்தம் காரணமாக இதய துடிப்பு நின்றுவிடலாம் என்று ஆடியோ வெளியிட்ட பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளரை டிஜிபி சைலேந்திரபாபு தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டார்.

f
f
author img

By

Published : Sep 26, 2021, 6:41 AM IST

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு திருநெல்வேலியில் தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த காவல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில், தென்மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொலை சம்பவங்களை தடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பின் டிஜிபி மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இதையடுத்து மாநகரின் முக்கிய காவல் நிலையமான பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு டிஜிபி சைலேந்திரபாபு திடீரென ஆய்வுக்கு சென்றார். அங்கு அவர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், காவலர்களிடம் பணி நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது, மன அழுத்தம் காரணமாக தனது இதயத்துடிப்பு நின்றுவிடலாம் என்று மிகுந்த வருத்தத்துடன் ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய உதவி ஆய்வாளர் அருணாச்சலமும் இருந்தார்.

காவலர்களுடன் பேசி முடித்துவிட்டு டிஜிபி சைலேந்திரபாபு கிளம்பும்போது டிஜிபி தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக அருணாச்சலம் மட்டும் சல்யூட் அடித்தார்.

அதை பார்த்த சைலேந்திரபாபு அருணாச்சலத்தை தனியாக அழைத்துச் சென்று பேசினார். அப்போது அருணாச்சலம், ஆடியோ வெளியட்டது தவறுதான். ஆனால் மிகுந்த மன அழுத்தத்தால் வேறு வழியின்றி ஆடியோ வெளியிட்டுவிட்டேன். திருநெல்வேலி மாநகர காவல் துறையில் காவலர்கள் அனுபவித்து வரும் இன்னல்கள் குறித்தும் டிஜிபியிடம் புலம்பியதாக கூறப்படுகிறது.

f
பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு

இதை கேட்ட டிஜிபி, மனம் தளராமல் தொடர்ந்து பணியாற்றுங்கள் அலுவலர்களின் தொந்தரவு தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறேன். உங்களுக்கு இடமாறுதல் வேண்டும் என்றால் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள் என்று அருணாச்சலத்துக்கு ஆறுதல் கூறியதாக தெரிகிறது.

பின் அங்கிருந்து கிளம்பிய சைலேந்திரபாபு பாளையங்கோட்டையில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தை ஆய்வு செய்தார். ஆடியோ வெளியிட்ட உதவி ஆய்வாளரை டிஜிபி தனியாக அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு சம்பவம் திருநெல்வேலி காவல் துறை வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது.

இதையும் படிங்க: 'மகளுடன் 10 நிமிடம் விளையாடக் கூட நேரமில்லை' - எஸ்.ஐ ஆடியோ வைரல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.