திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அன்பு உத்தரவின் பேரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சிறுவர் சிறுமியருக்கான குற்றங்களைக் கண்காணிப்பதற்காக பெண் காவலர்கள், அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒன்பது இருசக்கர வாகனங்கள் மாநகர காவல் துணை ஆணையாளர் சீனிவாசன் வழங்கினார்.
அதன்படி மாநகரிலுள்ள நெல்லை சந்திப்பு, டவுன், டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையம், பேட்டை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், பெருமாள்புரம், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய ஒன்பது காவல் நிலையங்களுக்கு இந்த இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. பெண்கள், குழந்தைகள் தொடர்பான பிரச்னை குறித்து தகவல் கொடுத்த உடனே விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கும் வகையில இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது.