ETV Bharat / state

நெல்லையில் கார் பருவ சாகுபடிக்கு அணைகள் திறப்பு - திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலி: கார் பருவ சாகுபடிக்கு அணைகள் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கார் பருவ சாகுபடிக்கு அணைகள் திறப்பு
கார் பருவ சாகுபடிக்கு அணைகள் திறப்பு
author img

By

Published : Jun 1, 2021, 2:01 PM IST

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து கார் பருவ நெல் சாகுபடிக்காக இன்று (ஜுன்.1) தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை சபாநாயகர் அப்பாவு, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையில் கார் பருவ சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாமிரபரணி பாயும் நெல்லை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, கொடுமுடி ஆறு நம்பியாறு, வடக்கு பச்சையாறு ஆகிய ஆறு அணைகள் உள்ளன.

கார் பருவ சாகுபடிக்கு அணைகள் திறப்பு
கார் பருவ சாகுபடிக்கு அணைகள் திறப்பு

இதில் பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய அணைகளில் திறக்கபடும் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் பாய்ந்தோடும். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி கார் பருவ நெல் சாகுபடிக்காக மேற்கண்ட அணைகளியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.

கார் பருவ சாகுபடிக்கு அணைகள் திறப்பு
கார் பருவ சாகுபடிக்கு அணைகள் திறப்பு

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக பருவமழை சரியான நேரங்களில் பெய்யாததால் ஜூன் மாதத்தில் அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக கார் பருவ சாகுபடிக்கு சரியான நேரத்தில் அரசு தண்ணீர் திறந்து விடாத்தால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக நெல்லை மாவட்டத்தில் கோடை காலங்களில் தொடர் மழை பெய்து வந்தது. அதேபோல் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட அடுத்தடுத்த புயல் காரணமாக நெல்லை மாவட்டத்தில் தொடர் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைகளில் இருந்து பல லட்சம் கனஅடி தண்ணீர் உபரிநீராக திறக்கப்பட்டது.

தொடர்ந்து அக்னி நட்சத்திரம் எனப்படும் கோடை காலத்திலும் நெல்லை மாவட்டத்தில் அவ்வப்போது விட்டு விட்டு தொடர் மழை பெய்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் வங்கக்கடலில் ஏற்பட்ட யாஸ் புயல் காரணமாக இரண்டு நாட்கள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. குறிப்பாக பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது. அணைகளில் நீர் இருப்பு போதிய அளவு இருப்பதால் இந்த ஆண்டு கார் பருவ சாகுபடிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை 137 நாட்களுக்கு அணைகளின் நீர் விநாடிக்கு 1,400 கனஅடி தண்ணீர் திறக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர் பாசனம் பெறும்.

இதையும் படிங்க: பெரம்பலூர் எஸ்பிக்கு கரோனா தொற்று உறுதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.