ETV Bharat / state

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் கூடுதல் விவரங்களை சேகரிக்கும் பணி தீவிரம்! - களப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்

திருநெல்வேலி: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் கூடுதல் விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் களப் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

மாநகராட்சி ஆணையர்
மாநகராட்சி ஆணையர்
author img

By

Published : Dec 24, 2020, 10:24 PM IST

திருநெல்வேலி மாநகராட்சியில் சுமார் 5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் நபர்களின் பட்டியல் எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்களின் கூடுதல் விவரங்களை சேகரிக்கும் பணி தற்போது நடைபெற்றுவருகிறது.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளார்களா? அவர்களுக்கான அரசு சலுகைகள் முறைப்படி கிடைக்கிறதா? என்பது குறித்து தெரிந்து கொள்ள இவ்விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

களப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு

இந்த விவரங்களை சேகரிக்க வரும் களப் பணியாளர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட சார் ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் கண்ணன் தலைமையில் மேலப்பாளையம் மண்டலத்திற்கு உள்பட்ட பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களின் கூடுதல் விவரங்களை சேகரிக்கும் பணிக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர். அப்போது வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள களப்பணியாளர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆணையர் கண்ணன் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் விபத்து காப்பீடு திட்டம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் சென்றடைய ஏதுவாக இந்த கூடுதல் விவரங்களை வழங்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் கண்ணன் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க:இசைக் கலைஞர்களுக்கு மூன்று மடங்கு ஊதிய உயர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.