ETV Bharat / state

தொடர் மழை எதிரொலி: தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை - tirunelveli district news

நெல்லை: தொடர் மழை எதிரொலியாக மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளிலிருந்து 22 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள ஆபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

மணிமுத்தாறு அணை
மணிமுத்தாறு அணை
author img

By

Published : Jan 12, 2021, 5:30 PM IST

நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் மாவட்டத்தின் பிரதான அணையான மணிமுத்தாறு,பாபநாசம் ஆகிய அணைகள் ஏற்கனவே நிரம்பியுள்ளன. குறிப்பாக 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை கடந்த 3 தினங்களுக்கு முன் தனது முழு கொள்ளளவை எட்டியது.

இந்த வருடன் வடகிழக்கு பருவமழையால் போதிய மழை கிடைத்ததால் 142 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை ஏற்கனவே நிரம்பி வழிந்தது. இந்த சூழ்நிலையில் கடந்த மூன்று தினங்களாக நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையால் அணைகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இரண்டு அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு 2ஆயிரத்து 465 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் 2ஆயிரத்து 370 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மணிமுத்தாறு அணைக்கு 3ஆயிரத்து161 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் 3ஆயிரத்து 149 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் அடுத்த இரண்டு தினங்களுக்கும் நெல்லை மாவட்டத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைகளிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி தற்போது மணிமுத்தாறு அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 3ஆயிரத்து 149 அடியிலிருந்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், அணையின் 7 மதகுகள் வழியாக உபரிநீர் வழிந்தோடுகிறது.

மணிமுத்தாறு அணை

இதேபோல் பாபநாசம் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2ஆயிரத்து 360 கண்ணாடியில் இருந்து 4 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு மொத்தம் 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து நெல்லை மாநகராட்சி அலுவலர்கள் கரையோர பகுதிக்குச் சென்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஆற்றுப் பாதையில் உள்ள பாலங்கள் மூழ்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரம் காட்டிவருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.