ETV Bharat / state

சென்னை - நெல்லை வந்தே பாரத் சோதனை ஓட்டம் - பொதுமக்கள் உற்சாக வரவேற்பு! - அண்மைச் செய்திகள்

சென்னையில் இருந்து நெல்லைக்கு சோதனை ஓட்டமாக வந்தடைந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பொதுமக்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

நெல்லை வந்த வந்தே பாரத்
நெல்லை வந்த வந்தே பாரத்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 10:58 PM IST

திருநெல்வேலி: வந்தே பாரத் எனப்படும் அதிவிரைவு ரயில் நாடு முழுவதும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில்களின் என்ஜின்கள் தமிழகத்தில் சென்னை பெரம்பூர் ஐசிஎஃப்பில் செய்யப்படுகிறது. இது புல்லட் ரயில் போல் அதிவேகத்தில் இயங்கும். இதனால் இதற்கு நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

இந்த ரயிலில் ஜிபிஎஸ் டிராக்கர் வசதி, கேமரா வசதி, ஏசி வசதி சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் என அனைத்து வசதிகளும் உள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது . தமிழகத்தில் ஏற்கனவே சென்னையில் இருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் இரண்டாவது வந்தே பாரத் ரயிலாகவும் தென்தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயிலாகவும் நெல்லை- சென்னை இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலை வரும் செப்.24ஆம் தேதி இயக்க ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த், முதுநிலை வணிக மேலாளர் ரவி பிரியா, முதுநிலை கோட்ட இயக்க மேலாளர் பிரசன்னா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடக்க விழாவிற்கான மேடை அமைக்கும் இடம், ரயில் வந்து செல்லும் நடைமேடை, ரயில் பராமரிப்பு பணி மேற்கொள்ளக்கூடிய பிட் லைன், ரயில்வே முன்பதிவு கவுண்டர்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. நெல்லை - சென்னை வந்தே இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நடைபெறும் தொடக்க விழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (செப்.21) மாலை வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து நெல்லை ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. சரியாக மாலை 3.45 மணிக்கு ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்த அதிவேக ரயிலை ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோர் வரவேற்றனர். மேலும், பொதுமக்கள் ரயில் முன்பு புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

இது குறித்து பயணிகள் கூறுகையில், "இது நெல்லை மக்களுக்கு கிடைத்த வரப்பிராசம் மற்றும் நெல்லைக்கு பெருமை என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நாளை நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் சோதனை முறையில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘அவளுடன் நானும் இறந்து விட்டேன்’ - விஜய் ஆண்டனி உருக்கமான பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.