ETV Bharat / state

"நாளை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்" - SDPI மாநில தலைவர் முபாரக்! - எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை

தமிழ்நாடு ஆளுநர் ஆர்என்.ரவியின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து, நாளை எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் முபாரக் அறிவித்துள்ளார்.

chennai
chennai
author img

By

Published : Jan 11, 2023, 12:25 PM IST

நெல்லை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் திருநெல்வேலியில் இன்று(ஜன.11) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "ஆளுநரின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும், ஆளுநரை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தியும் எஸ்டிபிஐ கட்சி, ஜனநாயக சக்திகளுடன் இணைந்து நாளை மாலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர், மத்திய அரசின் பிரதிநிதிகளாக நீங்கள் செயல்பட வேண்டும் என்று கூறி இருப்பது சிறுபிள்ளைத்தனமானது. சட்டமன்றத்தில் ஆளுநருக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக மாண்பை காப்பாற்றிய தமிழ்நாடு முதல்வரை எஸ்டிபிகட்சி பாராட்டுகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அருகில் உள்ள இருக்கன்துறை கிராமத்தில் கல்குவாரிகள் அமைக்க மாநில அரசு அனுமதிக்க கூடாது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடந்த சம்பவத்தில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் அங்கு சென்று ஆய்வு நடத்தி உடனடியாக சாதி வெறியர்களை கைது செய்ய வேண்டும்.

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் தனியார் துறையில் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு 75 சதவீதம் வரை இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்தக் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே இதற்கான சட்டம் இயற்ற வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: அரசியலுக்காக தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு என கூறுகின்றனர்: ஆளுநர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.