நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்ட பிரச்சாரங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஹெலிகாப்டர் மூலம் தென்காசி வந்தடைந்தார்.
பின்னர் தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணசாமியை அறிமுகம் செய்து வைத்தார். அனைத்து கூட்டணி கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.
அதில் அதிமுக கூட்டணி தலைமையிலான கூட்டணி கட்சி தென்காசி தொகுதியில் மாபெரும் வெற்றி பெற கடைக்கோடி தொண்டர் வரை அனைவரும் உழைக்க வேண்டும் என்றும், 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும் மோடி அரசு தொடர்ந்து நீடிக்கும் எனவும் தெரிவித்தார்.
பின்னர் புதிய தமிழகம் கட்சி சார்பாக போட்டியிடும் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார்.