ETV Bharat / state

கல்லறைகள் சேதப்படுத்திய விவகாரம்: ஆட்சியரிடத்தில் மனு

திருநெல்வேலி: நெல்லையில் கல்லறைகள் சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சியினர் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Cemetery Damage Issue: Petition to Collector

author img

By

Published : Oct 19, 2020, 5:51 PM IST

நெல்லை தச்சநல்லூர் மணிமூர்த்தீஸ்வர்ர் கோயில் அருகில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆர்சி சபைக்குச் சொந்தமான கல்லறை தோட்டத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், 50-க்கும் மேற்பட்ட கல்லறைகளை சேதப்படுத்தினர். இதைக் கண்டித்து பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் எட்டு பேரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கல்லறைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இருதய ஆண்டவர் ஆலயத்தில் இன்று நெல்லை மாவட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ், திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பது உள்ளிட்டவைக் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கூட்டம் முடிந்த பிறகு அனைத்துக் கட்சி நிர்வாகிகள், ஜூடு பால்ராஜ் ஆகியோர் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகரை சந்தித்து மனு அளித்தனர். அதில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். சம்பந்தப்பட்ட கல்லறை தோட்டத்திற்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.