நெல்லை: சமூகரங்கபுரத்தைச் சேர்ந்தவர் சுயம்பு ராஜ். இவர் சமூக ரங்கபுரம் பேருந்து நிலையத்தில் சரஸ்வதி பவன் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது ஓட்டலுக்கு சாப்பிட வந்த நபர் ஒருவர் தண்ணீர் குடிப்பது போல் குடித்துவிட்டு திடீரென உரிமையாளரின் மேஜையில் இருந்த விலை உயர்ந்த செல்போனை திருடி சென்றுள்ளார்.
இந்த சம்பவம் கடை சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து உரிமையாளர் ராதாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினரின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி செல்போனை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
பொதுவாக சினிமாவில் தான் இதுபோன்று சம்பவம் காமெடி காட்சிகளாக எடுக்கப்பட்டிருக்கும் குறிப்பாக நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் ’அலெர்ட் ஆறுமுகம்’ எனும் கதபாத்திரத்தில் ஹோட்டலுக்கு சாப்பிட செல்வது போல செல்வார். பிறகு அந்த ஹோட்டலின் கல்லாபெட்டியைத் திருடிச் செல்வார். இது போன்று நெல்லையில் சாப்பிடுவது போல் நடித்து கல்லாவில் இருந்த உரிமையாளரின் செல்போனை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உணவகத்திற்கு பெரியார் பெயர்... கடையை அடித்து நொறுக்கிய இந்து முன்னணி தொண்டர்கள்