ETV Bharat / state

காரை பின்னோக்கி இயக்கியபோது விபரீதம்: 4 வயது குழந்தை உயிரிழப்பு - திருநெல்வேலி பெட்ரோல் பங்கில் கார் விபத்து

திருநெல்வேலியில் உள்ள பெட்ரோல் பங்கில் காரில் டீசல் நிரப்பிவிட்டு பின்னோக்கி இயக்கியபோது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் நான்கு வயது பெண் குழந்தை சம்பவயிடத்திலேயே உயிரிழந்தது.

சிசிடிவி காட்சிகள் வெளியீடு
சிசிடிவி காட்சிகள் வெளியீடு
author img

By

Published : Feb 28, 2022, 7:57 AM IST

திருநெல்வேலி: அம்பை ரகுமான் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி ராஜா. இவரது மனைவி உஷா. இந்தத் தம்பதியின் பெண் குழந்தைகளின் வயது முறையே 4, 2 ஆகும். தம்பதியினர் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது அம்பை ராணி மகளிர் மேல்நிலைப்பள்ளியின் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் போட்டுவிட்டு நின்றுள்ளனர்.

சிசிடிவி காட்சிகள் வெளியீடு

அப்போது அதே பங்கிற்கு காரில் வந்த ஒருவர் டீசல் நிரப்பிவிட்டு காரை பின்னோக்கி இயக்கியபோது, எதிர்பாராதவிதமாக ராஜாவின் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் நான்கு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்தது. அம்பை காவல் துறையினர் கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆவின் பால் வேனை திருடிச் சென்ற நபர் - மடக்கிப் பிடித்த போலீசார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.