தமிழ்நாடு முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் அனைத்து மாவட்ட எல்லைகளும் காவல் துறையால் கண்காணிக்கப்பட்டு சோதனைகள் நடைபெற்றுன.
அப்போது, நெல்லையில் உள்ள கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்கள் அனைவரும் சோர்வாக உள்ளதை கவனித்து மனிதநேயத்துடன் குடிக்க தேநீர், தொட்டுக்க பிஸ்கட், சாப்பிட பழம், பாதுகாப்புக்கு கபசுர குடிநீர் பாக்கெட்டுகள் என வழங்கினார் செய்தார்.
பிந்பு காவலர்கள் அனைவரையும் பாதுகாப்புடன் பணிபுரியுமாறு அறிவுறுத்தினார். மேலும் வாகன வருகை பதிவேடுகளைப் பார்வையிட்ட அவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சோதனைச்சாவடிகளிலும் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வுசெய்தார்.
கரோனா ஊரடங்கு சமயத்தில் பணிச்சுமை காரணமாக காவலர்கள் மனசோர்வடைந்துள்ள நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனிதநேயத்துடன் காவலர்களுக்கு பழங்கள், பிஸ்கட்டுகள் வழங்கி பாதுகாப்புடன் பணிபுரிய அறிவுறுத்தியது காவலர்கள் மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு -அழகு நிலையங்கள், சலூன் கடைகள் திறக்கத் தடை !