தமிழ்நாடு பாஜகவின் மாநில துணைத்தலைவரான நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், சில தினங்களுக்கு முன் கரோனோ அறிகுறி தென்பட்டதால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
பின்னர் உரிய மருத்துவ சிகிச்சைக்கு பிறகு இன்று குணமடைந்ததாகவும், இன்று முதல் மக்கள் பணியில் ஈடுபட உள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இவர் பாஜக மாநிலத் தலைவர் பதவி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அப்பதவி கிடைக்காததால் கட்சி மீது அதிருப்தி கொண்டிருந்தார்.
இவர் முன்னதாக அதிமுகவில் அமைச்சராக பொறுப்பு வகித்திருந்த காரணத்தால், இவர் அதிமுகவில் இணைவதாக தகவல் வெளியானது. கரோனோ சிகிச்சை பெற்றுவந்ததால் மாற்று கட்சியில் இணைவது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.