ETV Bharat / state

கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவெடுக்கும் - நயினார் நாகேந்திரன் - அதிமுக பாஜக கூட்டணி

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பதவி விலகுவதாக அண்ணாமலை கூறியது அவரது தனிப்பட்ட கருத்து, தேர்தல் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவெடுக்கும் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

bjp
பாஜக நயினார் பேட்டி
author img

By

Published : Mar 18, 2023, 3:20 PM IST

"கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவெடுக்கும்"

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, பாஜக அதிமுக உடன் இணைந்து பயணித்து வருகிறது. 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி உடன் 4 தொகுதியில் வெற்றி பெற்றது. இதனிடையே பாஜக அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் வகையில் பல்வேறு சம்பவங்களும் நடைபெற்றன. குறிப்பாக இரு கட்சி நிர்வாகிகளும் ஒருவருக்கொருவர் மாறி மாறி எதிர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்றும், கூட்டணி வைத்தால் பதவி விலகுவேன் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அதிமுகவினர் கருத்து தெரிவிக்கும் போது, அண்ணாமலை கூறியதை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பதவி விலகுவதாக அண்ணாமலை கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்று நெல்லையில் பாஜக சட்டமன்ற குழு தலைவரும் எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் கூறுகையில், "பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு எடுக்கும். அது தான் எங்களது முடிவு. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்தாக உள்ளது.

தமிழ்நாட்டில் யாரும் இதுவரை எந்த கட்சியும் தனியாக போட்டியிடவில்லை. திமுக, அதிமுக, பாரதிய ஜனதா கட்சிகள் என அனைத்தும் கூட்டணி அமைத்து தான் போட்டிடுகிறது. தனியாக யாரும் போட்டியிட முடியாது. இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி நடந்தது இல்லை. மனதளவில் பாதிக்கப்பட்டால் நான் மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும். எனக்கு மனதளவில் எந்த வித பாதிப்பும் இல்லை. திருநெல்வேலி மாநகராட்சியில் உட்கட்சி பூசல் தொடர்பாக மோதல் நடைபெற்று வருவது அவர்கள் கட்சி விவகாரம். மாநகராட்சி பகுதியில் அவர்கள் பிரச்னைகளை மறந்து எல்லாப் பணிகளும் நடைபெற வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.