கரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி, அதை மே 3ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்று குறித்து மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை அரசு மருத்துவமனையில் கரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 62 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் இதுவரை 31 நபர்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வருகின்றனர்.
இதனால் வருகின்ற 26ஆம் தேதி மற்றும் மே 3ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்கள் மருந்தகங்கள், மருத்துவமனைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும்.
மேலும், ஞாயிற்று கிழமையான அந்த இரண்டு தினங்களும் பொதுமக்கள் 100 சதவிகிதம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அனுமதிச் சீட்டு இருந்தும் அனுமதி மறுப்பு - மேய்ச்சலின்றி சாகும் மலை மாடுகள்