ETV Bharat / state

தாமரைக்கு வாக்களித்தால் பெண்கள் கஷ்டப்பட்டு கையில் துணி துவைக்க வேண்டாம் - நடிகை நமிதா

author img

By

Published : Mar 30, 2021, 3:31 PM IST

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து, பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினரான நமீதா பரப்புரை மேற்கொண்டார்.

namitha
நடிகை நமிதா

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து, அக்கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் பிரபல திரைப்பட நடிகையுமான நமீதா திருநெல்வேலி தொகுதிக்குள்பட்ட டவுண் பேட்டை, சுத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.

திருநெல்வேலியில் நடிகை நமிதா பரப்புரை

அப்போது பேசிய அவர், "திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன், கடந்த முறை பல்வேறு நலத்திட்டங்களைத் திருநெல்வேலி தொகுதிக்குக் கொண்டுவந்துள்ளார். தாமரைக்கு வாக்களித்தால் ஆண்டுக்கு ஆறு எரிவாயு உருளைகள் வழங்கப்படும்.

பெண்களுக்கு 1500 ரூபாய் வழங்கப்படும். மத்திய மாநில அரசுகளின் அனைத்துத் திட்டங்கள் வீடு தேடி வரும். கையில் துணி துவைத்துக் கஷ்டப்பட வேண்டாம் என்றே இலவசமாக சலவை இயந்திரம் கொடுக்கப்படுகிறது. வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை தரப்படும்" எனக் கூறிவிட்டு 'தாமரை மலரும் தமிழ்நாடு வளரும்' என்ற முழக்கத்துடன் பரப்புரையை முடித்துக் கொண்டார்.

இதையும் படிங்க: வன்னியர் உள்இடஒதுக்கீடு நிரந்தரமானது, அதை நீக்க முடியாது- மருத்துவர் ராமதாஸ் அறிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.