ETV Bharat / state

நாளைய முதலமைச்சரே - நெல்லையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் சலசலப்பு

author img

By

Published : Jun 21, 2023, 1:42 PM IST

நடிகர் விஜய்யின் 49-வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் பலவிதமான போஸ்டர்களை அடித்து ஒட்டி, தங்களின் வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நெல்லையில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

actor-vijay-birthday-poster-nellai-vijay-fans-poster-excitement
நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு .

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு!

நெல்லை: தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர், நடிகர் விஜய். இவரது அரசியல் வருகையினை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். தமிழ் சினிமாவிற்கு விஜய் நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆகிறது. இவர் தனது அரசியல் வருகைக்கு அடிக்கல் நாட்ட தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி, பல்வேறு நலப்பணிகளை ரசிகர்கள் மூலம் செய்து வருகிறார்.

நடிகர் விஜய் தனது 49வது பிறந்த நாளை நாளையதினம் கொண்டாட உள்ள நிலையில் அவரது ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை திருவிழா போல் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். அவரது பிறந்த நாளை ஒட்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க :Leo Promo single: 'நா ரெடிதான் வரவா..' வெளியானது 'லியோ' ப்ரோமோ பாடல்!

இந்த நிலையில் நடிகர் விஜய் கலந்து கொள்ளும் சில நிகழ்ச்சிகள் அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னோட்டமாக அமைந்து வருகிறது. குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பேசிய நடிகர் விஜய், ''நம் விரலை வைத்து நம் கண்களையே குத்துவது தான் தற்போது நடக்கிறது. உங்கள் பெற்றோரிடம் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடாதீர்கள் என்று கூறுங்கள்'' என மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். ஏற்கனவே நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்து வரும் சூழ்நிலையில் நடிகர் விஜய்யின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

இந்த நிலையில் விஜய் பிறந்தநாளை ஒட்டி நெல்லை மாநகர் பகுதியில் பாளையங்கோட்டை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை கட்டடத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ள விஜய் பிறந்தநாள் போஸ்டரில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் வயதான பெண்மணி உடன் இருக்கும் புகைப்படமும் அதே போல் ”நாளைய முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” , ’’மேற்கே மறைந்த சூரியன் கிழக்கே உதித்தே தீரும்’’ எனக் குறிப்பிட்ட வாசகங்களும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

நெல்லையில் ஒட்டப்பட்டுள்ள விஜய் போஸ்டர்கள் அரசியல் வசனங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க:ரசிகர்களை பித்துபிடிக்க வைக்கும் 'பேச்சுலர்' பட நடிகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.