ETV Bharat / state

நெல்லை மாநகராட்சியில் கட்டணமில்லா தொலைபேசி சேவையிலும் முறைகேடு? - 30 லட்சத்து 36 ஆயிரத்து 695 ரூபாய் செலவு

திருநெல்வேலி: பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கும் கட்டணமில்லா தொலைபேசி சேவையிலும் முறைகேடு நடந்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

thirunelveli-corporation
thirunelveli-corporation
author img

By

Published : Feb 10, 2021, 6:43 AM IST

திருநெல்வேலி மாநகராட்சியில் குடிநீர், சாலை வசதி, பிற சேவைகள் குறித்து பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க 1800 425 4656 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர் திருநெல்வேலி மாநகராட்சி இலவச தொலைபேசி சேவை குறித்தும், அதன் பராமரிப்புச் செலவு குறித்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

பொதுத் தகவல் அலுவலர் அளித்த பதில்

அதன்படி மாநகராட்சிப் பொதுத் தகவல் அலுவலர் அருணாச்சலம் தற்போது அளித்த பதிலில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், 2010 முதல் 2016 வரை இந்தக் கட்டணமில்லா சேவை குறித்த பதிவேடு பராமரிக்கப்படவில்லை என்றும், 2016 ஜூன் முதல் 2020 ஆகஸ்ட் வரை மொத்தம் 30 லட்சத்து 36 ஆயிரத்து 695 ரூபாய் பராமரிப்புச் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டுமுதல் 2016 மே வரை திருநெல்வேலியைச் சேர்ந்த பிட்ஸ் என்ற கணினி நிறுவனம் இந்தக் கட்டணமில்லா சேவையைப் பராமரித்துவந்ததாகவும், 2016 ஜூன் முதல் தற்போதுவரை நெல்லை அண்ணா பல்கலைக்கழகம் இந்தச் சேவையைப் பராமரித்துவருவதாகவும் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் செலவு

ஆண்டுகள் வாரியாக...

  • 2016- 2017ஆம் ஆண்டில் ஐந்து லட்சத்து நான்காயிரம் ரூபாய்,
  • 2017 - 2018ஆம் ஆண்டில் ஆறு லட்சத்து 80 ஆயிரத்து 940 ரூபாய்,
  • 2018 -19ஆம் ஆண்டில் ஏழு லட்சத்து 53 ஆயிரத்து 489 ரூபாய்,
  • 2019-2020ஆம் ஆண்டில் ஏழு லட்சத்து 71 ஆயிரத்து 12 ரூபாய்,
  • 2020- 21 ஆகஸ்ட் வரை மூன்று லட்சத்து 21 ஆயிரத்து 255 ரூபாய்

பராமரிப்புச் செலவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி பதிலளித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 30 லட்சத்து 36 ஆயிரத்து 695 ரூபாய் பராமரிப்புப் பணிக்காக திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநகராட்சி வழங்கியுள்ளது.

முறைகேடு?

அதே சமயம் அண்ணா பல்கலைக்கழகம் அளித்த தகவலில், மாநகராட்சி இந்தக் காலகட்டத்தில் பராமரிப்புச் செலவுக்காக மொத்தம் 85 லட்சம் ரூபாய் தங்களுக்கு வழங்கியதாகப் பதில் அளித்துள்ளது.

எனவே இருதரப்பு பதிலிலும் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் இந்தக் கட்டணமில்லா சேவையில் முறைகேடு நடந்திருப்பதாகச் சந்தேகம் எழுகிறது என வழக்கறிஞர் பிரம்மா தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் பிரம்மா
வழக்கறிஞர் பிரம்மா

குளறுபடியைச் சரிசெய்க

கடந்த 2012ஆம் ஆண்டுமுதல் தற்போதுவரை இந்தக் கட்டணமில்லா சேவையில் மொத்தம் 49 ஆயிரத்து 506 புகார்கள் பெறப்பட்டு அதில் 43 ஆயிரத்து 924 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், ஐந்தாயிரத்து 584 புகார்களுக்கு இன்னும் தீர்வு காணப்படாமல் இருப்பதாகவும் மாநகராட்சி பொதுத் தகவல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

எனவே தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்தி இந்தக் கட்டணமில்லா சேவை பராமரிப்புச் செலவில் ஏற்பட்டுள்ள குளறுபடியைச் சரிசெய்ய வேண்டும் என வழக்கறிஞர் பிரம்மா கோரிக்கைவைத்துள்ளார்.

இதையும் படிங்க: 'யாரும் யாருக்கும் அடிமை இல்லை'- உறுதியேற்ற ஓபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.