ETV Bharat / state

நிவர் புயல் மீட்புப் பணி: நெல்லையில் 100 களப்பணியாளர்களுடன் கிளம்பிய குழு! - நிவர் புயல் மீட்பு பணி

திருநெல்வேலி: நிவர் புயல் மீட்புப் பணிக்காக திருநெல்வேலியிலிருந்து மாநகராட்சி சார்பில் 10 அலுவலர்கள் தலைமையில் 100 பணியாளர்கள் கொண்ட குழுவினர் விழுப்புரம் மாவட்டம் சென்றனர்.

bus
bus
author img

By

Published : Nov 25, 2020, 10:42 PM IST

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை நீடித்துவருகிறது. குறிப்பாக சென்னை நகர்ப் பகுதியில் தொடர் மழையால் சாலைகள், குடியிருப்புப் பகுதியில் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.

இதனிடையே நிவர் புயல் பாதிப்பில்லாத மாவட்டங்களிலிருந்து களப்பணியாளர்கள், நிவாரண பொருள்களை அனுப்பிவைக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி நெல்லை மாவட்டத்திலிருந்து மாநகராட்சி சார்பில் 10 அலுவலர்கள் தலைமையில் 100 பணியாளர்கள் கொண்ட குழுவினர் இன்று (நவ. 25) நிவர் புயல் மீட்புப் பணிக்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டனர்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான இரண்டு பேருந்துகளில் இந்தக் குழுவினர் சென்றனர். அவர்கள் 8 நவீன தண்ணீர் அகற்றும் மோட்டார்கள், 8 நவீன மரம் அறுவை இயந்திரங்கள் மற்றும் 20 டன் பிளிச்சிங் பவுடர் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர்.

இவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மரங்களை வெட்டுதல், சாலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடவுள்ளனர். தேவைப்பட்டால் அடுத்தகட்டமாக மற்றொரு குழுவினர் அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று நெல்லை மாநகராட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிரபல கால்பந்து வீரர் மாரடோனா மரணம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.