திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகேவுள்ள மருதமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவன்பெருமாள் (34). இவர் அப்பகுதியைச் சேர்ந்த16 வயது சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய அந்த சிறுமி, சிவபெருமாளிடம் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை 11ஆம் தேதியன்று சிறுமிக்கு சிவன்பெருமாள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் அம்பை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் சிவன்பெருமாளை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து நீதிபதி இந்திராணி நேற்று (அக்.22) தீர்ப்பளித்தார்.
அதில் குற்றவாளி சிவன்பெருமாளுக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அபராதம் விதிக்கப்பட்ட தொகையை சிறுமிக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.