ETV Bharat / state

தென்காசி தனிமாவட்டம்: தனி அலுவலர் நியமனம்

நெல்லை: தென்காசி மாவட்டம் பிரிப்பதற்கான தனி அலுவலர் அருண் சுந்தர்தயாளன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

collector press meet
author img

By

Published : Aug 4, 2019, 4:02 AM IST

Updated : Aug 4, 2019, 7:51 AM IST

நெல்லையில் இருந்து தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு அதை பிரிப்பதற்கான பூர்வாகங்க பணிகள் தொடங்கியுள்ளன. தென்காசி மாவட்டம் பிரிப்பதற்காக நியமிக்கப்பட்ட தனி அலுவலர் அருண்சுந்தர் தயாளன் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர் சதீஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம்

அப்போது, மாவட்டம் பிரிப்பது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 9ஆம் பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்படுகிறது. அன்று பிற்பகல் 3 மணிக்கு சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளன. 10ஆம் தேதி தென்காசி மக்களிடம் கருத்து கேட்கப்படும், இந்த கருத்து கேட்கும் கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் கலந்துகொள்வார் என தெரிவித்தார்.

மேலும், கூறுகையில், தனி மாவட்டம் பிரிப்பதற்கு 200 வருவாய் கிராமங்கள், இரண்டு கோட்டங்கள் இருக்கவேண்டும். பத்தரை லட்சம் மக்கள் தொகை இருக்கவேண்டும், இதுகுறித்து அரசுக்கு திருப்தி அளிக்கும் வகையில் அறிக்கை அளிக்கப்படும். கருத்துக் கேட்பு கூட்டம் சுமுகமாக நிறைவடையும் பட்சத்தில் மாவட்டம் பிரிப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Intro:தென்காசி மாவட்டம் பிரிப்பதற்கான தனி அதிகாரி அருண்சுந்தர்தயாளன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் . மாவட்டம் பிரிப்பது குறித்து 9-ந்தேதி நெல்லையிலும் 10-ந்தேதி தென்காசியிலும் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுகிறது, கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு பின் தனி மாவட்டம் குறித்து ஆணை பிறப்பிக்கப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர் சதீஷ் கூறியுள்ளார்.Body:

நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு மாவட்டம் பிரிப்பதற்கான பூர்வாகங்க பணிகள் தொடங்கி உள்ளன. தென்காசி மாவட்டம் பிரிப்பதற்காக நியமிக்கப்பட்ட தனி அதிகாரி அருண்சுந்தர் தயாளன் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார் . இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர்சதீஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

தென்காசி மாவட்டம் பிரிப்பதற்கான தனி அதிகாரி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் , மாவட்டம் பிரிப்பது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 9-ந்தேதி 9 மணி முதல் மதியம் 1 மணி பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்படுகிறது. பிற்பகல் 3 மணிக்கு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. இதுபோன்று 10-ந்தேதி  குற்றாலம் பராசக்தி கல்லூரியில் வைத்து காலை 11 மணி முதல் 1 மணி வரை கருத்து கேட்கிறது. இந்த கருப்பு கேட்பு கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் கலந்து கொள்கிறார் என்று தெரிவித்தார்

மேலும் கூறுகையில் தனி மாவட்டம் பிரிப்பதற்கு 200 வருவாய் கிராமங்கள் , இரண்டு கோட்டங்கள் இருக்கவேண்டும் , 10 அரைலட்சம் மக்கள் தொகை இருக்கவேண்டும் , இதுகுறித்து அரசுக்கு திருப்தி அளிக்கும் வகையில் அறிக்கை அளிக்கப்படும் . கருத்து கேட்பு கூட்டத்தில் மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள  , வீரகேரளம்புதூர், ஆலங்குளம் ஆகிய வட்டங்கள் பிரிப்பது தொடர்பாக அந்த பகுதி மக்களிடம் கருத்து கேட்கப்படும் . கருத்துக் கேட்பு கூட்டம் சுமுகமாக நிறைவடையும் பட்சத்தில் மாவட்டம் பிரிப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்

Conclusion:
Last Updated : Aug 4, 2019, 7:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.