ETV Bharat / state

நெல்லையில் 7 வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலி; மாநகராட்சியின் அலட்சியமே காரணம் என புகார்!

திருநெல்வேலி மாநகராட்சி நீர்த்தேக்க தொட்டியில் ஏற்பட்ட மின்கசிவால் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

a-7-year-old-girl-died-of-electrocution-in-nellai-due-to-the-negligence-of-the-corporation
நெல்லையில் 7 வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலி
author img

By

Published : Jul 27, 2023, 4:31 PM IST

திருநெல்வேலி : நெல்லை வண்ணாரப்பேட்டை அம்பேத்கர் நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் சக்திவேல் - சோனியா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சக்திவேலின் ஏழு வயது மகள் பேச்சியம்மாள் என்ற சத்யா தச்சநல்லூரில் உள்ள பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்ந்நிலையில் சம்பவதன்று தனது சகோதரர்களுடன் சத்யா விளையாடி கொண்டிருந்தார். அப்போது கையில் சாணம் பட்டதால் அருகில் இருந்த மாநகராட்சியின் சிறிய நீர்த்தேக்க தொட்டிக்கு கை கழுவ சென்றுள்ளார். ஆனால் குழாயில் தண்ணீர் வரவில்லை எனவே மோட்டார் போடுவதற்காக அருகில் இருந்த மின் மோட்டார் அறைக்குள் சென்ற போது மின்சாரம் தாக்கி சிறுமி சத்யா துடிதுடித்தார்.

இதை கவனித்த சத்யாவின் சகோதரர் ஓடி சென்று தனது தாத்தாவிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் வருவதற்குள் சிறுமி உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாளையங்கோட்டை போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் விபத்து குறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதையும் படிங்க: கால்நடை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் மூன்றாமிடம்; ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகள் சாதனை!

நெல்லை மாநகராட்சி சார்பில் அமைத்து கொடுக்கப்பட்ட மின் மோட்டார் அறை பல மாதங்களாக மிகவும் பாழடைந்த நிலையில் இருந்துள்ளது. குறிப்பாக கதவு எதுவும் இல்லாதல் திறந்த நிலையில் அறை இருந்துள்ளது. அறைக்குள் மின் மோட்டாரும் தாழ்வான நிலையில் இருப்பதால் குழந்தைகள் கூட எளிதில் தொட்டு விடும் நிலை இருந்துள்ளது.

எனவே தான் சிறுமி சத்யா அறைக்குள் சென்று சுவிட்ச்சை தொட்டதும் ஷாக் அடித்து அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது எனவே ஊழியர்கள் அந்த அறைக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாநகராட்சியில் வார்டு வாரியாக மக்கள் பணிகளை கண்காணிக்க கவுன்சிலர்கள் சுகாதார அலுவலர்கள் உள்ளனர். இருப்பினும் பழுதான இந்த மின் மோட்டார் சீரமைக்கப்படவில்லை. எனவே மாநகராட்சியின் அலட்சியமே 7 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழக்க காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க : அக்காவை பற்றி தவறாக பேசியதால் 7ஆம் வகுப்பு மாணவன் கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.