தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு கடந்த செம்படம்பர் 21 முதல் அக்டோபர் 7ஆம் தேதிவரை அரசின் வழிகாட்டுதல்களை மீறி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இத்தேர்வின் முடிவுகள் கடந்த 7ஆம் தேதி வெளியானது. இதில் 98 விழுக்காடு மாணவ-மாணவிகள் தோல்வியடைந்துள்ளனர். தோல்வி அடைந்த பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (டிசம்பர்-14) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா பரவல் அதிகமாக இருந்த காலகட்டத்தில், போக்குவரத்து முழுமையாக இல்லாத நிலையிலும், விடுதிகளும் திறக்கப்படவில்லை. ஆனால் நாங்கள் தொடர்ச்சியாக 14 நாட்கள் நேரில் சென்று தேர்வு எழுதினோம். கிராமங்களிலிருந்து வரும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த தங்களின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
நாங்கள் அனைவருமே அனைத்து பாடங்களிலும் தோல்வி சந்தித்துள்ளோம், இது எங்களை மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே தங்களைத் தேர்ச்சியுடைய செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் மறு தேர்வு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கைவைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து சென்றனர்.