ETV Bharat / state

நிர்பயா திட்டத்தில் 80% சிசிடிவிக்கள் பொருத்தம் - ரயில்வே வாரிய குழு

author img

By

Published : Mar 1, 2022, 12:37 PM IST

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் நிர்பயா திட்டத்தின் கீழ் 80 சதவிகித சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என ரயில்வே வாரிய குழு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

'நிர்பயா திட்டத்தில் 80 சதவீதம் சிசிடிவிக்கள் பொருத்தம்' - ரயில்வே வாரிய குழு

திருநெல்வேலி: ரயில்வே வாரிய குழு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் நேற்றைய (பிப்ரவரி 28) தினம் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ஆய்வில் ஈடுபட்டனர். நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் அமைந்துள்ள குடிநீர் தொட்டிகள், பயணிகள் தங்குமிடம், பாதுகாப்பு அறை, டிக்கெட் கவுன்டர்கள், கழிவறை, நடைமேடை, லிப்ட், எஸ்கலேட்டர், வைஃபை வசதி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின்னர் அவர் பேசுகையில், “திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் உள்ளிட்ட மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட 12 ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஒன்றிய அரசின் ரயில்வே வாரிய குழு கடந்த 6 மாதங்களாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில்வே கோட்டங்களில் ஆய்வை நடத்தி வருகிறது. சுவச் பாரத் திட்டத்தின் மூலம் ரயில் நிலையங்களில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தென்னக ரயில்வே உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்கள் தூய்மையானதாக இருக்கிறது. ஒன்றிய அரசின் நிர்பயா திட்டத்தின் மூலம் ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் நிர்பயா திட்டத்தின் கீழ் 80 சதவிகித சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ரயில் நிலையங்களில் பயணிகள் ஆலோசனைகள், குறைகளை தெரிவிக்கும் வகையில் ஆலோசனை பெட்டிகள் வைக்கப்பட உள்ளன. ரயில் பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு, நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்களை ஒரு மாத காலத்திற்குள் இயக்க ரயில்வே வாரியத்திற்கு ஆலோசனைகளை தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க: உயர்ந்த கொள்கைகளுக்காக ஸ்டாலின் தொடர்ந்து போராட வேண்டும்; கேரள முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.