ETV Bharat / state

நெல்லை மாநகரில் 60 பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்க 36 மொபைல் டீம் - nellai City deputy commissioner Suresh Kumar about urban local body election arrangement

நெல்லை மாநகரில் 60 பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்கத் துணை ஆணையர், உதவி ஆணையர்கள் தலைமையில் 36 மொபைல் டீம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை நெல்லையில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை இல்லை. பதற்றமான வாக்குச்சாவடியில் அனைத்து நிகழ்வுகளும் பதிவுசெய்யப்படும் என மாநகர காவல் துணை ஆணையர் தெரிவித்தார்.

நெல்லை மாநகரில் 60 பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்க 36 மொபைல் டீம்

author img

By

Published : Feb 18, 2022, 3:54 PM IST

திருநெல்வேலி: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை (பிப்ரவரி 19) நடைபெறும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை மாநகராட்சியில் 55 வார்டுகள், மூன்று நகராட்சிகளில் 69 வார்டுகள், 17 பேரூராட்சிகளில் 273 வார்டுகள் என மொத்தம் 397 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 1799 பேர் போட்டியிடுகின்றனர். இதையொட்டி மாவட்டம் முழுவதும் 933 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுக்குத் தேவையான 1128 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நெல்லை மாநகராட்சித் தேர்தல் வாக்குப் பதிவுக்குத் தேவையான இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்காக மாவட்ட ஆயுதப்படை மைதானத்திலிருந்து காவல் துறையினர் பாதுகாப்புடன் வாகனங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது.

நெல்லை மாநகரில் 60 பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்க 36 மொபைல் டீம்

வாக்குப்பதிவு எந்திரங்களைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்காக மாநகர காவல் துறை சார்பில் துணை ஆணையர், உதவி ஆணையர்கள் ஆகிய அலுவலர்கள் தலைமையில் காவல் துறையினர் அடங்கிய 36 மொபைல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த 36 குழுவினருக்கும் தலா ஒரு வாகனங்கள் ஒதுக்கப்பட்டு இந்த வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டன.

மாநகரில் பதற்றமான வாக்குச்சாவடிகளை இந்த மொபைல் குழுவில் இடம்பெற்றுள்ள காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என மாநகர காவல் (கிழக்கு) துணை ஆணையர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "மாநகரில் 60 இடங்களில் சின்ன சின்ன பிரச்சினை இருப்பதாகக் கண்டறிந்து அந்த இடங்கள் பதற்றமானவை என முடிவுசெய்துள்ளோம். ஏற்கனவே ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் காவல் துறையினர் அல்லது காவல் துறையினர் அல்லாத நபர் பாதுகாப்புக்கு இருப்பார்கள்.

எல்லா மொபைல் குழுவும் பதற்றமான வாக்குச்சாவடியைக் கண்காணித்து தேவைக்கேற்ப அங்குச் செல்வார்கள். மொபைல் குழுவினரை நான்கு குழுக்களாகப் பிரித்து நான்கு ஆய்வாளர்கள் தலைமையில் 36 மொபைல் குழுக்கள் இவிஎம் மிஷினுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள். இதுதவிர துணை ஆணையர், இணையர் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் எல்லோருக்கு ஒரு அதிரடிப்படை குழு கொடுத்துள்ளோம்.

இவர்களுக்கு ஏற்கனவே ஒவ்வொரு ஏரியா குறித்து பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்தும் என்ன பணி செய்ய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் இல்லை. தேர்தல் அமைதியாக நடைபெறும். பதற்றமான வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமரா இருக்கும். அங்கு இருக்கும் காவலர்கள் பாடி கேமரா பொருத்தப்பட்டிருக்கும், எனவே அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: நெல்லையில் அதிமுக வேட்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.