தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை, இலக்காக வைத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.
ஐந்து சட்டப்பேரவைத் தொகுதி
குறிப்பாக மாவட்டத்திலுள்ள நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, ராதாபுரம், நாங்குநேரி ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதியிலும் அந்தந்த தொகுதி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நெல்லை சட்டப்பேரவைத் தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடமாடும் வாக்குச்சாவடி வாகன சேவையை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
மாதிரி வாக்குச் சாவடி
முன்னதாக இந்த வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச் சாவடியினை மாவட்ட ஆட்சியர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
விசில் செயலி
மேலும், தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்காக ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'விசில் செயலி' குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் சோதனை அடிப்படையில் வாக்களித்தார். இந்த வாகனத்தில் நான்கு புறமும் "நமது இலக்கு 100 சதவீதம் வாக்குப்பதிவு, ஜனநாயகத்தின் வலிமை உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது" என்ற வாசகங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இந்த வாகனம் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்துத் தொதிகளுக்கும் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளது.
இதையும் படிங்க: காஞ்சிபுரம்: 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி