தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா அரசரடி அடுத்த பொம்முராஜபுரத்தைச் சேர்ந்தவர் சப்தோஷ்(28).
இவர் போடி திருமலாபுரம் பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடந்த நவம்பர் 29ஆம் தேதி மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு நான்கு நாள்கள் தன்னுடன் தங்க வைத்து சிறுமிக்கு பாலியல் ரீதியான தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கிருந்து தப்பி வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போடி தாலுகா காவல்துறையினர் சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.