ETV Bharat / state

சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் போக்சோவில் கைது - தேனி மாவட்ட செய்திகள்

தேனி: வீட்டில் தனியே இருந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

Youth arrested for sexually harassing girl

author img

By

Published : Oct 1, 2020, 8:24 AM IST

தேனி அருகே உள்ள அல்லிநகரம் கௌமாரியம்மன் கோயில் குளத்துத் தெருவைச் சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் பிரபு (30). இவர் நேற்று(செப்.30) தனது வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் 16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதையடுத்து சிறுமி அலறி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் பிரபுவைப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய அல்லிநகரம் காவல் துறையினர் பிரபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். வீட்டில் இருந்த சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

மருத்துவர்களின் அலட்சியத்தால் கருவிலேயே உயிரிழந்த குழந்தை - உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.